மார்ச் 18, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 78

ये माधुर्यविहारमण्टपभुवो ये शैत्यमुद्राकरा
ये वैशद्यदशाविशेषसुभगास्ते मन्दहासाङ्कुराः
कामाक्ष्याः सहजं गुणत्रयमिदं पर्यायतः कुर्वतां
वाणीगुम्फनडम्बरे हृदये कीर्तिप्ररोहे मे ७८॥

யே மாதுர்ய விஹார மண்டப புவோ யே ஶைத்ய முத்³ரா கரா
யே வைஶத்³ய த³ஶா விஶேஷ ஸுபகா³ஸ்தே மந்த³ஹாஸாங்குரா:
காமாக்ஷ்யா: ஸஹஜம் கு³ணத்ரயமித³ம் பர்யாயத: குர்வதாம்
வாணீ கு³ம்ப²ன ட³ம்ப³ரே ஹ்ருʼ³யே கீர்த்தி ப்ரரோஹே மே 78

இனிமையின் கேளி மண்டபங்களும், குளிர்ச்சிக்கு முத்திரை இருப்பிடங்களும், வெண்மை (தெளிவு/நிர்மல) நிலையால் அதிக அழகு பெற்றவைகளும் ஆகிய காமாக்ஷியின் மென்னகை முளைகள், தமது இயல்பான இனிமை, தண்மை, வெண்மை ஆகிய முக்குணங்களையும் முறையே என் வாக்கின் சொல்லடுக்கிலும், உள்ளத்திலும், புகழ் வளர்ச்சியிலும் இருக்கச்செய்யட்டும்.

இனிமையின் கேளி எழில்மண் டபங்களும் ஈரதனத்
தினிடங் களும்வெண் தெளிவினில் மிக்கவும் சீருடையுன்
கனிநகை கால்களால் காமாட்சி, இன்தண்கம் கட்டிவாக்க
தனிலுள்ளத் தில்சாயை தன்திதி யில்செய்க தன்மையிலே!

கேளி-விளையாட்டு; ஈர-குளிர்ச்சில் தனம்-முத்திரை; வெண்தெளிவு-நிர்மலம்;  சீர்-அழகு; கால்கள்-குருத்துகள்; இன்-இனிமை; தண்-குளுமைல் கம்-வெண்மை; சாயை-புகழ்; திதி-வளர்ச்சி/காத்தல்; தன்மை-முறையே

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


இனிமையின் கேளி எழில் மண்டபங்களும் ஈர தனத்தின் இடங்களும் வெண் தெளிவினில் மிக்கவும் சீருடை உன் கனி நகை கால்களால், காமாட்சி, இன், தண், கம், கட்டி வாக்கதனில் உள்ளத்தில் சாயைதன் திதியில் செய்க தன்மையிலே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...