कामाक्ष्या मृदुलस्मितांशुनिकरा दक्षान्तके वीक्षणे
मन्दाक्षग्रहिला हिमद्युतिमयूखाक्षेपदीक्षाङ्कुराः ।
दाक्ष्यं पक्ष्मलयन्तु माक्षिकगुडद्राक्षाभवं वाक्षु मे
सूक्ष्मं मोक्षपथं निरीक्षितुमपि प्रक्षालयेयुर्मनः ॥ ७९॥
காமாக்ஷ்யா ம்ருʼது³ல ஸ்மிதாம்ஶு நிகரா: த³ (தா³) க்ஷாந்தகே வீக்ஷணே
மந்தா³க்ஷ க்³ரஹிலா ஹிமத்³யுதி மயூகா²க்ஷேப தீ³க்ஷாங்குரா: ।
தா³க்ஷ்யம் பக்ஷ்மலயந்து மாக்ஷிக கு³ட³ த்³ராக்ஷா ப⁴வம் (ஸமம்) வாகக்ஷூ மே
ஸூக்ஷ்மம் மோக்ஷபத²ம் நிரீக்ஷிதுமபி ப்ரக்ஷால யேயுர்மன: ॥ 79॥
தட்சனது
எதிரியாம் சிவன் தன்னைப் பார்க்கும்போது வெட்குபவையும், சந்திர கிரணங்களைத் குறை கூறுவதில்
உறுதி பூண்டவையுமான காமாக்ஷியின் மென்மை மிக்க புன்னகைக் குவியல்கள், எனது வாக்கில்
தேன், வெல்லம், திராட்சை இவற்றிலுள்ள இனிமையைக் கொள்ளச் செய்யட்டும். மேலும் மிகவும்
நுண்ணியமான முக்தி வழியை உற்றுக் காண ஏற்றவாறு என்மனத்தை தூய்மையாக்கவேண்டும்.
தாட்சன் எதிரி தனைப்பார்க்க வெட்கிடும், சந்திரனின்
காட்டைப் பழிகாழ்கொள் காமாட்சி அம்மைக் கயநகையின்
கூட்டென்றன் வாக்கில் குளம்தேன் திராட்சை கொடுத்துமுத்தி
வீட்டின்நுண் பாதை விளங்கவுள் ளம்செய்க வெள்ளெனவே
தாட்சன்
-பிரஜாபதி, தாட்சாயணியின் தந்தை; தாட்சன் எதிரி-சிவன்; காட்டு - கிரணங்கள்; பழி-குறை
கூறுதல்; காழ்-உறுதி; கயநகை-மென்னகை குளம்-வெல்லம்;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
தாட்சன் எதிரிதனைப்
பார்க்க வெட்கிடும், சந்திரனின் காட்டைப் பழி காழ்கொள் காமாட்சி அம்மைக் கயநகையின் கூட்டென்றன் வாக்கில் குளம்,
தேன், திராட்சை கொடுத்து, முத்தி வீட்டின்நுண் பாதை விளங்க
உள்ளம்செய்க வெள்ளெனவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam