संक्रुद्धद्विजराजकोऽप्यविरतं कुर्वन्द्विजैः संगमं
वाणीपद्धतिदूरगोऽपि सततं तत्साहचर्यं वहन् ।
अश्रान्तं पशुदुर्लभोऽपि कलयन्पत्यौ पशूनां रतिं
श्रीकामाक्षि तव स्मितामृतरसस्यन्दो मयि स्यन्दताम् ॥ ७६॥
ஸம்க்ருத்³த⁴ த்³விஜ ராஜகோऽப்யவிரதம் குர்வந் த்³விஜை: ஸம்க³மம்
வாணீ பத்³த⁴தி தூ³ரகோ³ऽபி ஸததம் தத்ஸாஹசர்யம் வஹன் ।
அஶ்ராந்தம் பஶு து³ர்லபோ⁴ऽபி கலயன் பத்யௌ பஶூநாம் ரதிம்
ஸ்ரீகாமாக்ஷி! தவ ஸ்மிதாம்ருʼத ரஸ ஸ்யந்தோ³ மயி ஸ்யந்த³தாம் ॥ 76॥
துவிசபதியிடன் (சந்திரன்) சினங்கொண்டிருந்தும்,
துவிசர்களுடன் (பற்கள், இருமுறை தோன்றுவதால்), எப்போதும் சேர்ந்திருப்பதும், வாணியின்
சொற்களுக்கும் எட்டாத ஒன்றாயினும், சொற்களைக் கூறும் வாயிலே வாசம் செய்வதும், பசுக்களான
அஞ்ஞானிகளுக்கு அறிந்துகொள்ள, அடையவியலாத ஒன்றாயிருப்பினும், பசுபதியிடன் அன்பைச் செய்வதாயுமிருக்கிற
உன்னுடைய புன்சிரிப்பான அமுதத்தின் உற்றுப்பெருக்கு என்மீது வருஷிக்கட்டும்!
துவிசரா சர்மேல் சுளிவுற்றும், சேரும் துவிசருடன்;
கவிவாணி சொற்கள் கடந்தும்சொல் வாசற் கருகுளது;
அவித்தையர்க் கெட்டா அறிவாயின் ஈசனை அன்புசெயும்;
கவினுன் நகைமது காமாட்சி! பெய்க கனிந்துமீதே
துவிசராசர்-
சந்திரன்; சுளிவு-சினம்; துவிசர்-பற்கள்; சொல்வாசல்-வாய்;
அவித்தை-அஞ்ஞானம்;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
துவிசராசர்மேல் சுளிவுற்றும், சேரும் துவிசருடன்; கவிவாணி சொற்கள் கடந்தும்
சொல்வாசற்கு அருகுளது; அவித்தையர்க் கெட்டா அறிவாயின் ஈசனை அன்புசெயும்; கவினுன் நகைமது காமாட்சி! பெய்க
கனிந்துமீதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam