மார்ச் 14, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 75

हेरम्बे गुहे हर्षभरितं वात्सल्यमङ्कूरयत्
मारद्रोहिणि पूरुषे सहभुवं प्रेमाङ्कुरं व्यञ्जयत्
आनम्रेषु जनेषु पूर्णकरुणावैदग्ध्यमुत्तालयत्
कामाक्षि स्मितमञ्जसा तव कथंकारं मया कथ्यते ७५॥

ஹேரம்பே³ கு³ஹே ஹர்ஷ பரிதம் வாத்ஸல்ய மங்கூரயத்
மார த்³ரோஹிணி பூருஷே ஸஹ புவம் ப்ரேமாங்குரம் வ்யஞ்ஜயத்
ஆனம்ரேஷு ஜனேஷு பூர்ண கருணா வைத³க்³த்யமுத்தாலயத்
காமாக்ஷி! ஸ்மிதமஞ்ஜஸா தவ கத²ம் காரம் மயா கத்²யதே 75

காமாக்ஷி! கணேசனிடமும், கந்தனிடமும் மகிழ்ச்சி நிறைந்த மிகுந்த அன்பை வளர்ப்பதும், மன்மத வைரியாகச் சிறந்தவரிடம், இயற்கையான அன்பின் முளையைக் காட்டுவதும், தன்னை வணங்கும் மக்களிடம் குறையாக் கருணையை மிகச்செய்வதான உன் புன்னகையை எப்படித்தான் நான் வர்ணிப்பேன்?

கணபதி கந்தர்க்குக் கட்டில் மகிழன்பைக் காட்டிவளர்
கணைமலர் காமன்ப கைவர்க் கியற்கையில் காதலதன்
துணைமுளைக் காட்டும், துதிசனர்க் கன்பைச் சுருக்கிடாச்செய்
இணையிலுன் மென்னகை என்கூற காமாட்சி! ஏலெனக்கே?

கட்டில்-வரையிலா; கணைமலர்-மலர்க்கணை;  முளை-அங்குரம்; ஏலும்-இயலும்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


கணபதி கந்தர்க்குக் கட்டில் மகிழன்பைக் காட்டிவளர், கணைமலர் காமன் பகைவர்க்கு இயற்கையில் காதலதன் துணைமுளைக் காட்டும், துதி சனர்க்கு கன்பைச் சுருக்கிடாச்செய் இணையிலுன் மென்னகை என்கூற காமாட்சீ ஏலெனக்கே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...