कुण्ठीकुर्युरमी कुबोधघटनामस्मन्मनोमाथिनीं
श्रीकामाक्षि शिवंकरास्तव शिवे श्रीमन्दहासाङ्कुराः ।
ये तन्वन्ति निरन्तरं तरुणिमस्तम्बेरमग्रामणी
कुम्भद्वन्द्वविडम्बिनि स्तनतटे मुक्ताकुथाडम्बरम् ॥ ४९॥
குண்டீ²குர்யுரமீ குபோ³த⁴க⁴டநாமஸ்மன்மனோமாதி²னீம்
ஸ்ரீ காமாக்ஷி ஶிவம்கராஸ்தவ ஶிவே ஸ்ரீமந்த³ஹாஸாங்குரா: ।
யே தன்வந்தி நிரந்தரம் தருணிமஸ்தம்பே³ரமக்³ராமணீ-
கும்ப⁴த்³வந்த்³வவிட³ம்பி³னி ஸ்தனதடே முக்தா குதா²ட³ம்ப³ரம் ॥ 49॥
மங்களமானவளே! ஸ்ரீகாமாக்ஷி! எப்புன்னகை, இளமையெனும் சிறந்த யானையின் மத்தகங்களை
ஒத்த தனங்களின் முத்துக்களால் நெய்யப்பட்ட விரிப்பின் அழகை எப்போதும் செய்கின்றனவோ,
அத்தகு மங்களம் விளைக்கும் புன்னகைக் கொழுந்துகள் என் மனதை பாதிக்கும், தீய அறிவின்
தொடர்பை தொலைக்கட்டும்!
மங்கல மேஸ்ரீகா மாட்சியெப்
புன்னகை மாழையாம்கூர்
பொங்கடி மத்தகம் போல்தன
முத்துக்கள் பொத்திநெய்த
துங்க விரிப்பின் சுபமிடு
மோவத் துளிர்களென்னுள்
தங்கிக் கெடுக்கும் சடத்தைகா
மாட்சீசெய், தாமறுத்தே!
கூர்-சிறந்த; பொங்கடி-யானை; தனம்-கொங்கை; பொத்தி-பதித்து; துங்க-உயர்ந்த; சுபம்-அழகு;
இடும்-செய்தல்; துளிர்கள்-கொழுந்து; சடம்-அறிவின்மை;
பொருள் விளங்கப் படிக்குமாறு:
(அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)
மங்கலமே ஸ்ரீ காமாட்சி, எப்புன்னகை மாழையாம் கூர் பொங்கடி மத்தகம்போல் தன முத்துக்கள்
பொத்தி நெய்த துங்க விரிப்பின் சுபம் இடுமோ, அத் துளிர்களென்னுள் தங்கிக் கெடுக்கும்
சடத்தைக் காமாட்சீ செய், தாமறுத்தே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam