பிப்ரவரி 16, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 48

सूर्यालोकविधौ विकासमधिकं यान्ती हरन्ती तम:
संन्दोहं नमतां निजस्मरणतो दोषाकरद्वेषिणी
निर्यान्ती वदनारविन्दकुहरान्निर्धूतजाड्या नृणां
श्रीकामाक्षि तव स्मितद्युतिमयी चित्रीयते चन्द्रिका ४८॥

ஸூர்யாலோகவிதௌ விகாஸமதிகம் யாந்தீ ஹரந்தீ தம:
ஸந்தோ³ஹம் நமதாம் நிஜஸ்மரணதோ தோ³ஷாகரத்³வேஷிணீ
நிர்யாந்தீ வத³னாரவிந்த³ குஹரான் நிர்தூத ஜாட்³யா ந்ருʼணாம்
ஸ்ரீகாமாக்ஷி! தவ ஸ்மித த்³யுதிமயீ சித்ரீயதே சந்த்³ரிகா 48

காமாக்ஷீ! சூரியராம் அறிஞர்களைக் காண்கையில் மிகவும் மலர்ச்சியடைவதும், தன்னை நினைத்து வணங்குவோரின் அறியாமை இருளைப் போக்குவதும், களங்கரைப் இகழ்வதும், முகத்தாமரையினின்று வெளிவருவதும், மனிதரின் சடத்தன்மையைப் போக்குவதுமாம் உன் மென்னகை ஒளி நிலவு விந்தையானதே!

அருணனைப் போலே அறிஞரைக் காண அலர்மிகுமாம்;
இருள்நீக்கும், உள்கி இறங்கும்பத் தர்க்கு; இகழ்ந்திடுமாம்
இருண்மதி; போக்கும் இழுதை மனிதர்க்கு; இந்நகைகொள்
அரத்த முகவெல் அரியேகா மாட்சீ அதிசயமே!

அருணன்-சூரியன்; அலர்தல்-மலர்தல்; இருள்-அறியாமை; உள்கி-தியானித்து; பத்தர்-வணங்கித் துதிப்போர்; இகழ்தல்-பழித்தல்; இருண்மதி-அறிவீனர்/ இருள்படிந்த சந்திரன்; இழுதை-சடத்தன்மை/அறிவின்மை; அரத்தம்-தாமரை; எல்-ஒளி; அரி-நிலவு;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


அருணனைப் போலே அறிஞரைக் காண அலர்மிகுமாம்; இருள்நீக்கும், உள்கி இறங்கும் பத்தர்க்கு; இகழ்ந்திடுமாம் இருண்மதி; போக்கும் இழுதை மனிதர்க்கு; இந்நகைகொள் அரத்த முக எல் அரியே காமாட்சீ அதிசயமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...