वक्त्रश्रीसरसीजले तरलितभ्रूवल्लिकल्लोलिते
कालिम्ना दधती कटाक्षजनुषा माधुव्रतीं व्यापृतिम् ।
निर्निद्रामलपुण्डरीककुहनापाण्डित्यमाबिभ्रती
कामाक्ष्याः स्मितचातुरी मम मनः कातर्यमुन्मूलयेत् ॥ ११॥
வக்த்ர ஸ்ரீஸரஸீ ஜலே தரலித ப்⁴ரூவல்லி கல்லோலிதே
காலிம்னா த³த⁴தீ கடாக்ஷ ஜனுஷா மாது⁴வ்ரதீம் வ்யாப்ருʼதிம் ।
நிர்னித்³ராமல புண்ட³ரீக குஹனா பாண்டி³த்யமாபி³ப்⁴ரதீ
காமாக்ஷ்யா: ஸ்மித சாதுரீ மம மன: காதர்யமுன்மூலயேத் ॥ 11॥
அசையும் புருவ அலைகளமைந்த காமாக்ஷி
தேவியினுடைய ஒளிதளும்பும் முகவொளியாம் தாமரைத் தடாகத்தில் கடைக்கண்ணில் உதித்த கருவொளியாம்
வண்டுகள் மொய்க்கும்படி செய்வதும், மலர்ந்த வெண்தாமரையின் அழகை பறித்துக் கொண்டதென்று
எண்ணத்தக்கதுமான புன்முறுவலின் அழகானது என் மனத்துக் கவலைகளை அடியோடு ஒழிக்கட்டுமே!
அசையும் புருவ அலையமை காமாட்சி அஞ்சுமுகக்
கசத்தடா கத்தில், கடைக்கண் உதித்த
கருவொளியாம்
இசைவண்டு கள்மொய்க்க ஏலும்வெண் டாமரை
ஏர்பறிக்கும்
சுசிமித ஆரிச் சுரமேற்றிச் செய்கயென்
சூழ்பறப்பே!
அஞ்சு-ஒளி;
கசம்-தாமரை; ஏலுதல்-இயலுதல்; ஏர்-அழகு; சுசிமித-புன்னகை; ஆரி - அழகானது; சுரமேற்றி-அடியோடு
ஒழித்தழித்தல்; பறப்பு-கவலை;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam