[மூலப் பாடலின் சிலேடை அமைவை கூடியவரைக்கும் மாற்றாமலிருப்பதற்காக வடமொழிச் சொற்களையே பயன்படுத்தினாலும், காமாட்சியின் அருளால் அவையும் பொருந்தியது அற்புதமே!
மீண்டும் மீண்டும்,
மனதுக்கு நிறைவைத் தரும் நிகழ்வுகளில் இதுவொன்று!]
नित्यं बाधितबन्धुजीवमधरं मैत्रीजुषं पल्लवैः
शुद्धस्य द्विजमण्डलस्य च तिरस्कर्तारमप्याश्रिता ।
या वैमल्यवती सदैव नमतां चेतः पुनीतेतरां
कामाक्ष्या हृदयं प्रसादयतु मे सा मन्दहासप्रभा ॥ १२॥
நித்யம் பா³தி⁴த ப³ந்து⁴ ஜீவமத⁴ரம் மைத்ரீ ஜுஷம் பல்லவை:
ஶுத்³த⁴ஸ்ய த்³விஜ-மண்ட³லஸ்ய ச திரஸ் கர்தாரமப்யாஶ்ரிதா ।
யா வைமல்யவதீ ஸதை³வ நமதாம் சேத: புனீதே-தராம்
காமாக்ஷ்யா ஹ்ருʼத³யம் ப்ரஸாத³யது மே ஸா மந்த³ஹாஸ-ப்ரபா⁴ ॥ 12॥
எப்போதும் பந்துசீவர்களைப் (உறவினரை/செம்பரத்தைப் பூக்களை)
பாதிப்பதும், பல்லவங்களோடு (தளிர்களோடு/தீயரோடு) நட்புள்ளதும், தூய இரு பிறப்பாளரை
(அந்தணர் குலத்தை/பற்களை) திரக்கரிப்பதும் (அவமதிப்பதும்/மறைப்பதும்),
அதரத்தை (கீழுதட்டை/கீழோனை) அடைந்தாலும், எப்புன்னகை, தானும் நிர்மலமாய் (தூய்மையாய்/வெண்மையாய்)
இருந்து, எப்போதும் வணங்குபவர் மனதை மிகவும் தூய்மையாக்குமோ, காமாக்ஷியின் அப்புன்னகை
காந்தியானது என் மனதை தெளிவுறுத்தட்டும்! பசிலேடையில் இப்பாடலை அமைத்திருப்பதே ஓர்
அழகு.
உறவினர்களைத் துன்புறுத்தி, தீயரோடு
நட்புகொண்டு, அந்தணரை அவமதித்து, கீழோரோடு சேர்ந்தவொன்று தானும் தூயதாய் தன்னை வணங்குவோரையும்
அவ்வாறு செய்வது வியப்பன்றே! மற்றொருவிதமாகப் பொருள் கொண்டால், செம்பரத்தைக்கு ஒப்பாயும்,
தளிரேபோல் மென்மையும், பற்களை மறைப்பதுமாம் உதட்டை அடைந்த புன்சிரிப்பு தானும் ஒளியுடையதாய்,
தன்னை வணங்கினோர்க்கும் தூய்மையைத் தருகிறது என்பதே உள்ளுறைப் பொருள்.
பந்துசீ வர்க்கென்றும் பாதிப்பாம்,
பல்லவப் பக்கமுடைத்
தந்தணர் தம்மைகீழ் தள்ளி அதரத்தில் சாய்வதுமெம்
மந்த நகையோவம் மாசற்ற, மாசறு வாமநகை
தந்துளத் தில்செய் தகவினை காமாட்சீ
சந்ததமே!
பந்துசீவர்
- உறவினர்/செம்பரத்தை; பல்லவம்- தளிர்/துட்டர்; அடாத்தி-திரக்கரித்து; அதரம்-கீழுதடு/கீழோர்;
வாமம்-ஒளி; தகவு-தெளிவு; சந்ததம்-எப்போதும்.
பல்லவப் பக்கமுடைத்து அந்தணர் தம்மை
கீழ்தள்ளி - தளிர்களின் பக்கமாயிருப்பதும் (ஒத்திருப்பது), அந்தணரை அவமதித்தல்;
பல்லவ பக்கமுடைத், தந்தணர் தம்மை
கீழ்தள்ளி - துட்டரை அடுத்து, பற்கள் கூட்டத்தை
கீழேதள்ளி உதடுகளை மூடுவதால் மென்னகைக் கொள்ளும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam