ஜனவரி 12, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 13

द्रुह्यन्ती तमसे मुहुः कुमुदिनीसाहाय्यमाबिभ्रती
यान्ती चन्द्रकिशोरशेखरवपुःसौधाङ्गणे प्रेङ्खणम्
ज्ञानाम्भोनिधिवीचिकां सुमनसां कूलंकषां कुर्वती
कामाक्ष्याः स्मितकौमुदी हरतु मे संसारतापोदयम् १३॥

த்³ருஹ்யந்தீ தமஸே முஹு: குமுதி³னீ ஸாஹாய்யமாபி³ப்ரதீ
யாந்தீ சந்த்³ரகிஶோரஶேக²ரவபு:ஸௌதாங்க³ணே ப்ரேங்க²ணம்
ஜ்ஞாநாம்போநிதிவீசிகாம் ஸுமனஸாம் கூலம்கஷாம் குர்வதீ
காமாக்ஷ்யா: ஸ்மிதகௌமுதீ³ ஹரது மே ஸம்ஸாரதாபோத³யம் 13

அஞ்ஞான இருளுக்குப் பகையாகும், ஆம்பல் மலர்களுக்கு உதவுவதும், இளஞ் சந்திரனை தலையில் சூடிய சிவனாரின் மேனியாம் உப்பரிகையில் உலவுவதும், ஞானமுடைய நல்லோர்களின் ஞானமென்னும் கடலின் அலைகளை மிகச் செய்வதுமான காமாக்ஷியின் புன்னகையாம் நிலவானது என் பவ அழல் உதிப்பதை அழிக்கட்டும்!

அவித்தை இருளை அடல்செய்யும், ஆம்பற்கோர் ஆதரவாம்
உவந்தபி றைசூடி ஒண்ணுடல் மாடம் உலவிடுமாம்,
அவமில் லறிவோர் அறிவுக் கடலலை ஆற்றுமாமென்
பவத்தீ அழிக்கும் பகர்நகை, காமாட்சீ, பால்நிலவே!


அவித்தை-அஞ்ஞானம்; அடல்-பகை; மாடம்-உப்பரிகை; அவமில்-குற்றமில்லா; ஆற்று-மிக; பகர்நகை-ஒளிநகை;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...