काश्मीरद्रवधातुकर्दमरुचा कल्माषतां बिभ्रती
हंसौघैरिव कुर्वती परिचितिं हारीकृतैर्मौक्तिकैः ।
वक्षोजन्मतुषारशैलकटके संचारमातन्वती
कामाक्ष्या मृदुलस्मितद्युतिमयी भागीरथी भासते ॥ १४॥
காஶ்மீர த்³ரவதா⁴து கர்த³மருசா கல்மாஷதாம் பி³ப்⁴ரதீ
ஹம்ஸௌகை⁴ரிவ குர்வதீ பரிசிதிம் ஹாரீக்ருʼதைர் மௌக்திகை: ।
வக்ஷோஜன்மதுஷாரஶைலகடகே ஸம்சாரமாதன்வதீ
காமாக்ஷ்யா ம்ருʼது³ல ஸ்மிதத்³யுதிமயீ பா⁴கீ³ரதீ² பா⁴ஸதே ॥ 14॥
காமாக்ஷியின்
அழகிய மென்னகை ஒளிப்பெருக்காம் கங்கை, காச்மீரக் குங்குமப்பூவின் குழம்பால் விசித்திர
நிறக்கலவைக் கொண்டு, மாலையாகப் போடப்பட்ட வெண்முத்துக்களெனும் அன்னங்களோடு உடன் உறைந்து,
தனங்களாம் பனிமலைத் தாழ்வைரையில் ஒய்யார நடை பழகுவதாயும் உள்ளது.
காட்சியாம் காமாட்சீ காண்மென் நகைக்காந்தி கங்கைவெள்ளம்,
காட்மீரக் ஈரக் கலவையால், வண்ணங் கலந்தவிந்தை
காட்சியாய், வெண்முத்துக் காண்மாலை அன்னங் களோடுறைந்து
காட்டும், இமயக்கொங் கைத்தாழ் வரையில், கவின்நடையே!
காட்சி,காண்-அழகு; காட்மீரம்-காஷ்மீரம்;
ஈரம்-குங்குமப்பூ; கலவை-குழம்பு;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam