ஜனவரி 09, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 10

श्वेतापि प्रकटं निशाकररुचां मालिन्यमातन्वती
शीतापि स्मरपावकं पशुपतेः सन्धुक्षयन्ती सदा
स्वाभाव्यादधराश्रितापि नमतामुच्चैर्दिशन्ती गतिं
कामाक्षि स्फुटमन्तरा स्फुरतु नस्त्वन्मन्दहासप्रभा १०॥

ஶ்வேதாபி ப்ரகடம் நிஶாகர ருசாம் மாலின்யமாதன்வதீ
ஶீதாபி ஸ்மர பாவகம் பஶுபதே: ஸந்துக்ஷயந்தீ ஸதா³
ஸ்வாபாவ்யாத³ராஶ்ரிதாபி நமதாமுச்சைர்தி³ஶந்தீ ³திம்
காமாக்ஷி ஸ்பு²டமந்தரா ஸ்பு²ரது நஸ்த்வன் மந்த³ஹாஸ ப்ரபா 10

ஹே காமாக்ஷி! வெண்ணிறமாயினும் நிலவொளியில் கருமையைப் படரச் செய்வதும், குளிர்ந்திருப்பினும், சிவனிடம் மன்மதத் தீயை எப்போதும் வளரச் செய்வதும், இயல்பால் கீழுதட்டை விரும்பி அணைந்தபோதிலும், வணங்குவோருக்கு உயர்வைத் தருகிறதுமாயிருக்கும் உன் புன்சிரிப்பின் ஒளியானது என்னுளத்தில் நன்கு இலங்குகவே!

வெண்நிறங் கொண்டும் நிலாகாந்தி மேற்காரி மேவுவதும்
தண்ணுற்றும் ஈசற்குத் தற்பகத் தீயென்றும் தாம்வளர்க்கும்
பண்பால் அதரத்தைப் பற்றினும்,  காமாட்சீ!, பற்றினார்க்குன்
விண்தரு மென்னகை, மின்னென் உளம்நன்கு வீங்குகவே!

காரி-கருமை; தண்-குளிர்வு; தற்பகன்-மன்மதன்; பண்பால்-இயல்பினால்; அதரம்-கீழுதடு; பற்றினார்-துதித்தொழுகினார்; விண்-உயர்வு; மின்-ஒளி; வீங்கு-மிகுந்திடுதல்; 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...