ஜனவரி 08, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 9

जेतुं हारलतामिव स्तनतटीं संजग्मुषी सन्ततं
गन्तुं निर्मलतामिव द्विगुणितां मग्ना कृपास्त्रोतसि
लब्धुं विस्मयनीयतामिव हरं रागाकुलं कुर्वती
मञ्जुस्ते स्मितमञ्जरी भवभयं मथ्नातु कामाक्षि मे ९॥

ஜேதும் ஹாரலதாமிவ ஸ்தனதடீம் ஸம்ஜக்³முஷீ ஸந்ததம்
³ந்தும் நிர்மலதாமிவ த்³விகு³ணிதாம் மக்³னா க்ருʼபாஸ்த்ரோதஸி
லப்³தும் விஸ்மயனீயதாமிவ ஹரம் ராகா³குலம் குர்வதீ
மஞ்ஜுஸ்தே ஸ்மிதமஞ்ஜரீ வபயம் மத்²னாது காமாக்ஷி மே 9

ஹே! காமாக்ஷி! முத்துமாலையை வெல்வதற்காக எப்போதுமுன் தனபாரங்களை நன்கு அடைவதும், இருமடங்காய் தூயவெண்மை அடைவதற்காக கருணை அருவியில் அமிழ்ந்ததும், வியத்தகு பெருமையுற சிவனாரை காதலில் தன்னை இழக்கச் செய்வதும், மிகவும் அழகுமான உன் புன்சிரிப்பாம் பூங்கொத்து எனது இகவாழ்வின் அச்சத்தை நீக்கட்டும்.

வெண்முத்து மாலையை வெல்ல தனபாரம் மேவுவதும்,
வெண்மை இரட்டிப்பாய் வேண்டி தயைவீழ்ச்சி வீழ்ந்தமிழும்,
வெண்ணீற னைகாதல் வீழ்த்துன் வியன்செய் விபுன்சிரிப்பாம்
கண்ணியே, காக்கட்டும் காமாட்சீ நீக்கிச கத்துருவே

மேவுதல்-பொருந்துதல் (அடைதல்); வீழ்ச்சி-அருவி; வெண்ணீறன்-சிவன்; வியன்-பெருமை; வி-அழகு; கண்ணி-பூங்கொத்து; சகத்துரு-இகவாழ்வின் அச்சம்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...