शम्भोर्या परिरम्भसम्भ्रमविधौ नैर्मल्यसीमानिधिः
गैर्वाणीव तरङ्गिणी कृतमृदुस्यन्दां कलिन्दात्मजाम् ।
कल्माषीकुरुते कलङ्कसुषमां कण्ठस्थलीचुम्बिनीं
कामाक्ष्याः स्मितकन्दली भवतु नः कल्याणसन्दोहिनी ॥ ८॥
ஶம்போ⁴ர்யா பரிரம்ப⁴ ஸம்ப்⁴ரம விதௌ⁴ நைர்மல்ய ஸீமானிதி:⁴
கை³ர்வாணீவ தரங்கி³ணீ க்ருʼத ம்ருʼது³ஸ்யந்தா³ம் கலிந்தா³த்மஜாம் ।
கல்மாஷீ குருதே கலங்க ஸுஷமாம் கண்ட²ஸ்த²லீ சும்பி³னீம்
காமாக்ஷ்யா: ஸ்மித கந்த³லீ ப⁴வது ந: கல்யாண ஸந்தோ³ஹினீ ॥ 8॥
மெதுவாய் ஓடும் கருத்த யமுனை நதியை
தேவநதியாம் கங்கை கலந்து விசித்திர நிறமுடையதாகச் செய்வதுபோல், துடிப்பாகத் தேவியைத்
தழுவும் நேரத்தில் சிவனுடைய கருங்கண்ட நிறமும், தேவியின் வெண்புன்சிரிப்பும் கலந்து
விசித்திர நிறமுடையதாகச் செய்யும் தூய்மைச் செல்வத்தின் எல்லையெதுவோ, அந்த புன்சிரிப்பின்
கொத்து மங்கலம் எமக்குத் தருவதாகட்டும்
கருத்துப், பொலிந்தோடும்
காலிந்தி வானாறாம் கங்கையோடு
பொருந்திய வண்ணமே போல்தேவி யைச்சிவன் போய்த்தழுவும்
தருணம் கருங்கழுத் தைக்கூடும் வெண்ணகை தாமடையத்
தரும்தூய்மை எல்லை, தருகவே காமாட்சீ தான்சுபமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam