मनोरङ्गे मत्के विबुधजनसंमोदजननी
सरागव्यासङ्गं सरसमृदुसंचारसुभगा ।
मनोज्ञा कामाक्षि प्रकटयतु लास्यप्रकरणं
रणन्मञ्जीरा ते चरणयुगलीनर्तकवधूः ॥ ९०॥
மனோரங்கே³ மத்கே விபு³த⁴
ஜன ஸம்மோத³ ஜனனீ
ஸராக³ வ்யாஸங்க³ம் ஸரஸ ம்ருʼது³ ஸம்சார ஸுப⁴கா³ ।
மனோஜ்ஞா
காமாக்ஷி! ப்ரகட யது லாஸ்ய ப்ரகரணம்
ரணன் மஞ்ஜீரா
தே சரண யுக³லீ நர்தகவதூ:⁴ ॥ 90॥
காமாக்ஷீ! ஞானியர்க்கு மகிழ்ச்சியைத்
தருபவளும், கவரக்கூடிய மென்னடையால் அழகுள்ளவளும், மனதுக்கினியாளும், ஒலிக்கும் சிலம்பணிந்தவளுமாயுள்ள
உன்னிரு திருவடிகளாம் நடனப்பெண், என் மனமெனும் அரங்கத்திலே நல்ல வண்ணங்களோடு கூடிய
நாட்டியத்தைச் செய்யட்டும்!
ஞானியர்க்
கானந்தம் நல்கி, கவர்மென் நடையுடைத்து
தேனாய்
மனத்தினில் தித்தித் தொலிக்கும் சிலம்பணிந்து
ஞானயீர்
பாதமாம் நாட்டியப் பெண்னென்னில் நாட்டியமுந்
தானாடிச்
செய்கவே தாய்காமாட் சீவண்ணந் தான்கலந்தே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam