परिष्कुर्वन्मातः पशुपतिकपर्दं चरणराट्
पराचां हृत्पद्मं परमभणितीनां च मकुटम् ।
भवाख्ये पाथोधौ परिहरतु कामाक्षि ममता-
पराधीनत्वं मे परिमुषितपाथोजमहिमा ॥ ९१॥
பரிஷ்குர்வன்
மாத: பஶுபதி கபர்த³ம் சரண ராட்
பராசாம்
ஹ்ருʼத் பத்³மம் பரமப⁴ணிதீநாம் ச மகுடம் ।
ப⁴வாக்²யே பாதோ²தௌ⁴ பரிஹரது
காமாக்ஷி! மமதா-
பராதீ⁴னத்வம் மே பரிமுஷித பாதோ²ஜ மஹிமா ॥ 91॥
தாயே காமாக்ஷி! பசுபதியாம் (அனைத்துயிரையும் புரப்பவன்) சிவனுடைய சடைகளையும்,
பெரியோருடைய இதய கமலங்களையும், வேதங்களின் மகுடத்தையும் (உபநிடதங்கள்) அழகு செய்வதும்,
தாமரையின் அழகையும் கவர்வதான உன்னுடைய சிறந்த பாதம், பிறவிக்கடலில் விழுந்து மமதைக்கு
வசப்பட்டிருக்கும் என் நிலைமையைப் போக்கட்டும்!
சிவனின் சடையொடு சீலவான் றோர்களின் செவ்விதயக்
கவாரமும் வேதக் கடைமுடி யுந்தான் கவின்செயுமாம்,
கவார அழகும் கவர்வதாம் நின்கூர் கழலிணையிப்
பவத்தின் செருக்குழல் பாவம்கா மாட்சீ பருங்குகவே
ஆன்றோர்-பெரியோர்; இதயக்கவாரம்-இதயகமலம்; வேதக்
கடைமுடி-உபநிடதம்; கவாரம் - தாமரை,கமலம்; கூர்-சிறந்த பருங்கு-பிடுங்கு (வலிவொடு நீக்குதல்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam