டிசம்பர் 19, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 92

प्रसूनैः सम्पर्कादमरतरुणीकुन्तलभवैः
अभीष्टानां दानादनिशमपि कामाक्षि नमताम्
स्वसङ्गात्कङ्केलिप्रसवजनकत्वेन शिवे
त्रिधा धत्ते वार्तां सुरभिरिति पादो गिरिसुते ९२॥

ப்ரஸூனை: ஸம்பர்காத³மரதருணீகுந்தல பவை:
அபீஷ்டாநாம் தா³னாத³னிமபி காமாக்ஷி நமதாம்
ஸ்வ ஸங்கா³த் கங்கேலி ப்ரஸவ ஜனகத்வேன ச ிவே
த்ரிதாத்தே வார்தாம் ஸுரபிரிதி பாதோ³ கி³ரி ஸுதே 92

மலைமகளே! மங்கள உருவே! காமாக்ஷியே! உன் பாதம் தேவமகளிர் கூந்தல்களிலிருக்கும் மலர்களோடு சேர்ந்திருப்பதானாலும், வணங்குபவர்களின் விருப்பத்தைக் கொடுப்பதாலும்,  தன்னுடைய தொடுதலினால் அசோக மரங்களில் மலர்களை பூக்கவைப்பதாலும் சுரபி என்னும் பெயரை மூவிதத்திலும் அடைகிறதே!

மலைமகள் காமாட்சீ!  மங்கள மே!யுன் மலரடிகள்
அலைகூந்தல் தேவ அணங்கினர் கூட்டால், அடிவணங்கும்
நிலையோர் விருப்பத்தை நேர்தலால், சேர்க்கையால் நின்றலர்த்தும்
மலரசோ கத்தால்நா மம்சு ரபிமூன்றாய் வாழ்ந்திடுமே!


நேர்தல்-கொடுப்பதால்; சேர்க்கையால்-தொடுதலினால்; நாமம்-பெயர்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...