டிசம்பர் 20, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 93

महामोहस्तेनव्यतिकरभयात्पालयति यो
विनिक्षिप्तं स्वस्मिन्निजजनमनोरत्नमनिशम् ।
स रागस्योद्रेकात्सततमपि कामाक्षि रुचिरां
किमेवं पादोऽसौ किसलयरुचिं चोरयति ते ॥ ९३॥

மஹா மோஹ ஸ்தேன வ்யதிகர ப⁴யாத் பாலயதி யோ
வினிக்ஷிப்தம் ஸ்வஸ்மின் நிஜஜன மனோரத்னமனிஶம் ।
ஸ ராக³ஸ்யோத்³ரேகாத் ஸததமபி காமாக்ஷி ருசிராம்
கிமேவம் பாதோ³ऽஸௌ கிஸலய ருசிம் சோரயதி தே ॥ 93॥

காமாக்ஷியே! உன் பாதம், தன்னில் ஆசையுள்ளவர்களின் மனமாம் இரத்தினத்தை, பெருமோகம் என்னும் திருடன் திருடிவிடுவானோ என்ற பயத்திலிருந்து காப்பாற்றுகிறதே! அப் பாதம் ஆசையில் மிகுதியால் அழகு தளிரின் ஒளியை மட்டும் ஏன் எப்போதும் இவ்வாறு திருடுகிறது!

உன்பாதம் தன்னை உவந்தார் உளமாம் ஒளிமணியை
குன்றாப் பெருமோகக் கொள்ளையன் கள்வுக் குவஞ்சிடாது
என்றுமே காக்கினும் ஏனாசை கொண்டே எழில்தளிர
தன்காந்தி யைமட்டுந் தான்செய்யும் காமாட்சீ தக்கரித்தே!


உவந்தார்- ஆசைப்படுவர்; ஒளிமணி-இரத்தினம்; பெருமோகம்-மகாமோகம்; கள்வு-திருடுதல்; தக்கரித்தல்-திருடுதல்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...