டிசம்பர் 05, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 78

विशुष्यन्त्यां प्रज्ञासरिति दुरितग्रीष्मसमय-
प्रभावेण क्षीणे सति मम मनःकेकिनि शुचा
त्वदीयः कामाक्षि स्फुरितचरणाम्भोदमहिमा
नभोमासाटोपं नगपतिसुते किं कुरुते ७८॥

விுஷ்யந்த்யாம் ப்ரஜ்ஞாஸரிதி து³ரிதக்³ரீஷ்மஸமய-
ப்ரபாவேண க்ஷீணே ஸதி மம மன:கேகினி ுசா
த்வதீ³ய: காமாக்ஷி ஸ்பு²ரிதசரணாம்போ³மஹிமா
நபோமாஸாடோபம் நக³பதிஸுதே கிம் ந குருதே 78

மலையரசன் மகளே! காமாக்ஷி! ஞானமென்னும் நதி பாவமென்னும் கோடைகாலத்தின் வெப்பத்தினால் வற்றி, மனமென்னும் மயிலும் துயரால் வாடியுள்ளபோது, உன்னுடைய அழகிய பாதமென்னும் பெருமை மிக்க மேகமேன் ஆவணி மாதத்தின் பெருமையை வெளிப்படுத்தவில்லை?

வேணியாம் ஞானமும் வேனலாம் தீவினை வெப்பமதில்
கோணிட உள்ளமாம் கொஞ்சிமை சோர்வில் குழைந்திடவும்
மாணுடை நின்றன் மணிப்பத மேகமேன் மாரிநப

மாணைக்கா மாட்சீ! மலைமக ளேசொல்! மறைத்ததுவே?

வேணி-நதி; வேனல்- கோடைக்காலம்; அறக்கடை-பாவம்; கோணிட-முடங்கிட; கொஞ்சு+இமை- அழகு மயில்; சோர்வு-துயரம்; குழைதல்-வாடி, வதங்கல்; மாண்-பெருமை; மணி-அழகு; மாரி-மழை; நபம்-ஆவணிமாதம்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...