டிசம்பர் 06, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 79

विनम्राणां चेतोभवनवलभीसीम्नि चरण-
प्रदीपे प्राकाश्यं दधति तव निर्धूततमसि
असीमा कामाक्षि स्वयमलघुदुष्कर्मलहरी
विघूर्णन्ती शान्तिं शलभपरिपाटीव भजते ७९॥

வினம்ராணாம் சேதோ பவனவலபீஸீம்னி சரண-
ப்ரதீ³பே ப்ராகா்யம் த³தி தவ நிர்தூத தமஸி
அஸீமா காமாக்ஷி ஸ்வயமலகுது³ஷ்கர்ம லஹரீ
விகூர்ணந்தீ ாந்திம் லபபரிபாடீவ பஜதே 79

காமாக்ஷியே! உன் பாதமெனும் ஒளிவிளக்கு வணங்குவோர் மனமென்னும் வீட்டின் உப்பரிகையில் இருட்டை நீக்கி ஒளியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதில் முடிவில்லா அலைகளால் வரும் பெரிய தீவினைகள், விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள்போல தாமே சுழன்று விழுந்து அழிகின்றன.

உன்பாத மாம்தீபம், உள்ளமாம் வீட்டினின் உப்பரிகை
தன்னிலல் நீக்கி தருமொளி! பாவத் தரங்கமந்த
மின்றி வரினும் விளக்கிலே வீழ்ந்திடு விட்டிலைப்போல்
அன்னையே காமாட்சீ ஆங்கே இறந்து அழிந்திடுமே!


அல்-இருள்; தரங்கம்-அலை; அந்தமின்றி-முடிவின்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...