டிசம்பர் 07, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 80

विराजन्ती शुक्तिर्नखकिरणमुक्तामणिततेः
विपत्पाथोराशौ तरिरपि नराणां प्रणमताम्
त्वदीयः कामाक्षि ध्रुवमलघुवह्निर्भववने
मुनीनां ज्ञानाग्नेररणिरयमङ्घिर्विजयते ८०॥

விராஜந்தீ ுக்திர் ² கிரண முக்தா மணி ததே:
விபத் பாதோ² ராௌ தரிரபி நராணாம் ப்ரணமதாம்
த்வதீ³ய: காமாக்ஷி த்ருவமலகுவஹ்னிர் பவ வனே
முனீநாம் ஜ்ஞானாக்³னேரரணிரயமங்கிர் விஜயதே 80

காமாக்ஷீ! உனது இப்பாதம் நகவொளியாம் முத்துக்கள் உறையும் சிப்பியாகும்; உன்னை வணங்கும் மனிதருக்கு ஆபத்தாம் கடலில் உதவும் ஓடமாம்; பிறந்திறப்பதாம் காட்டை எரிக்கும் பெரிய தீ! முனிவர்களுடைய ஞானத்தீக்கு தீக்கடையும் கோலாக விளங்குகிறதே!

உனதிக் கழல்கள் உகிரொளி முத்தின் உறைவிடமாம்;
உனைப்பணி வோர்க்கிக்காம் உந்தியில் ஏந்துமோர் ஓடமதாம்;
வினைப்பிறப் பாம்காட்டை மிக்கெழு தீயில் விழுங்குவதாம்;
முனிவர்க்கு ஞானத்தீ மூட்டிடும் காமாட்சீ மூட்டுகோலே!


உகிரொளி-நகக்காந்தி; முத்தின் உறைவிடம்-சிப்பி; உந்தி-கடல்; ஏந்து-உதவு; மூட்டுதல்-தூண்டிடும்; மூட்டுகோல்-தீயைத் தூண்டும் கோல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...