டிசம்பர் 08, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 81

समस्तैः संसेव्यः सततमपि कामाक्षि विबुधैः
स्तुतो गन्धर्वस्त्रीसुललितविपञ्चीकलरवैः
भवत्या भिन्दानो भवगिरिकुलं जृम्भिततमो-
बलद्रोही मातश्चरणपुरुहूतो विजयते ८१॥

ஸமஸ்தை: ஸம்ஸேவ்ய: ஸததமபி காமாக்ஷி விபு³தை:
ஸ்துதோ க³ந்தர்வ ஸ்த்ரீ ஸுலலித விபஞ்சீ கல ரவை:
வத்யா பிந்தா³னோ பவ கி³ரி குலம் ஜ்ருʼம்பித தமோ-
³ல த்³ரோஹீ மாத் சரண புருஹூதோ விஜயதே 81

தாயே! காமாக்ஷி! உன்னுடய பாதமாம் தேவேந்திரன் அனைத்து ஞானிகளாலும் சேவிக்கப்படுபவனாகவும், கந்தருவப் பெண்டிரின் உத்தம வீணைகளின் இனிய ஒலியால் துதிக்கப்படுகிறானாகவும், பவமென்னும் பருவதங்களின் கூட்டங்களை பிளப்பவனாகவும், வளரும் அறியாமையாம் வலன் என்னும் அசுரனைக் கொல்லுகிறனாகவும் விளங்குகிறான்.

குறிப்பு: இந்திரன் மலைகளை ஏன் பிளந்தான்? முன்பு இறகுகளோடிருந்த மலைகள், பறந்து சென்று நகரங்களை அழித்தன. மக்களைத் துன்பத்திலிருந்து காப்பாற்ற இந்திரன் வஜ்ராயுதம்கொண்டு அவற்றின் சிறகுகளை வெட்டி வீழ்த்தி, பறக்கவொட்டாமல் செய்தான்.)

உன்பா தமாகிய உம்பர்கோன் ஞானியர் உம்பரெலாம்
தன்னை வணங்கிட, தந்திரப் பெண்டிர்கை தண்டியதன்
இன்னிசைப் போற்ற, இகமாம லைகள் இடந்துமேயென்
அன்னைகா மாட்சி! அபோத வலனை அழிக்கிறானே!


உம்பர்-தேவர்; தந்திர-கந்தருவ; தண்டி-வீணை; இகமாமாலை-சம்சாரமாகிய மலைகள்; இடந்து-பிளந்து; அபோத-அஞ்ஞான; வலன் -வலாசுரன்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...