டிசம்பர் 09, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 82

वसन्तं भक्तानामपि मनसि नित्यं परिलसद्-
घनच्छायापूर्णं शुचिमपि नृणां तापशमनम्
नखेन्दुज्योत्स्नाभिः शिशिरमपि पद्मोदयकरं
नमामः कामाक्ष्याश्चरणमधिकाश्चर्यकरणम् ८२॥

வஸந்தம் பக்தாநாமபி மனஸி நித்யம் பரிலஸத்³-
னச்சா²யா பூர்ணம் ுசிமபி ந்ருʼணாம் தாப மனம்
நகே²ந்து³ ஜ்யோத்ஸ்னாபி: ிிரமபி பத்³மோத³ய கரம்
நமாம: காமாக்ஷ்யா் சரணமதிகா்சர்ய கரணம் 82

பக்தர்களின் மனங்களில் எப்போதும் வசிப்பதும், மிகுந்த ஒளி நிறைந்ததும், மனிதர்களின் உள்ள வெம்மையைப் போக்குவதும், நகமாம் சந்திரனின் ஒளியினால் குளிர்ந்ததும், தாமரைகளை மலரச் செய்வதும், மிகவும் வியக்கத்தக்க பெருமைகளை உடையதுமாம் காமாக்ஷியின் பாதங்களை வணங்குகிறோம்.

வசித்தென்றும் பத்தர் மனத்தில், ஒளிமிக்கு, மானுடர்க்கு
நசித்துள்ள வெம்மை, நகமாம் நிலவால் நனிகுளிர்ந்து,
சசாங்கம் மலர்த்தி, தகைமை வியக்கத் தகபலகொள்,
சசாங்கமாம் காமாட்சீ தாள்கள் துதித்தோம் தலைபணிந்தே!


சசாங்கம்-தாமரை; தகைமை-பெருமை;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...