டிசம்பர் 10, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 83

कवीन्द्राणां नानाभणितिगुणचित्रीकृतवचः-
प्रपञ्चव्यापारप्रकटनकलाकौशलनिधिः
अधःकुर्वन्नब्जं सनकभृगुमुख्यैर्मुनिजनैः
नमस्यः कामाक्ष्याश्चरणपरमेष्ठी विजयते ८३॥

கவீந்த்³ராணாம் நானா பணிதி கு³ணசித்ரீ க்ருʼதவச:-
ப்ரபஞ்ச வ்யாபார ப்ரகடன கலா கௌலனிதி:
அத:குர்வன்னப்³ஜம் ஸனக ப்ருʼகு³ முக்²யைர் முனிஜனை:
நமஸ்ய: காமாக்ஷ்யா் சரண பரமேஷ்டீ² விஜயதே 83

சிறந்த கவிஞர்களின் பலவகையான சொற்களின் குணங்களால் விவரிக்கப்படுகின்ற வாக்கின் உருவான உலகைப் படைக்குந் தொழிலில் வெளிப்படுத்தப்பட்ட கலையின் திறமைகள் உடையவனாயும், தாமரையைத் தனக்குக் கீழாசனமாகக் கொண்டவ,  சநகர், பிருகு முதலாம் முனிவர்களால் வணங்கத்தக்கனாகவும், காமாட்சியின் பாதமாம் பிரமன் விளங்குகிறான்.

பரம கவிஞர் பகர்பன்சொற் பாடைப் பகர்சிகுவை
உருவாய், உலகை உருசெய் தொழிலின் ஒளிர்திறன்கள்
நிரம்பி, கயமடி நிற்கச்செய், காமாட்சீ நீளடியாம்
பிரமன், சநக பிருகா திமுனிதுதிப் பெற்றானே!


பரம-சிறந்த; பாடை-குணங்கள்; சிகுவை-பேசுந் திறன்; கயம்-தாமரை; நீளடி-மேன்மை செய்யும் பாதங்கள்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...