டிசம்பர் 11, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 84

भवत्याः कामाक्षि स्फुरितपदपङ्केरुहभुवां
परागाणां पूरैः परिहृतकलङ्कव्यतिकरैः
नतानामामृष्टे हृदयमुकुरे निर्मलरुचि
प्रसन्ने निश्शेषं प्रतिफलति विश्वं गिरिसुते ८४॥

வத்யா: காமாக்ஷி ஸ்பு²ரித பத³பங்கேருஹ புவாம்
பராகா³ணாம் பூரை: பரிஹ்ருʼத கலங்க வ்யதிகரை:
நதாநாமாம்ருஷ்டே ஹ்ருʼ³ய முகுரே நிர்மல ருசி
ப்ரஸன்னே நிேஷம் ப்ரதிப²லதி வி்வம் கி³ரிஸுதே 84

மலை மகளே! காமாக்ஷி! உன்னை வணங்குபவரின் மனமாகிய கண்ணாடி, உன்றன் மலர்ந்து ஒளிதரும் சரணகமலங்களிலிருந்து வெளியான, எவ்வித அழுக்கையும் போக்கும் பூந்தாது பொடிகளால் துடைக்கப்பட்டு, அதனால் நிர்மல ஒளிபெற்று, அதில் எல்லா உலகங்களும் விம்பமாகுதே!

உன்னை வணங்குவோர் உள்ளமாம் ஆடி, ஒளிதருமாம்
உன்றன் மலரடி ஒண்டாம ரைத்தாதால், ஊத்தையெலாம்
நன்றாய் துடைத்து நனிதூ வொளியுற்று ஞாலமெல்லாம்
மன்றவிம் பங்காட்டு மாம்தாய்கா மாட்சீ! மலைமகளே!

ஆடி-கண்ணாடி; தாது-மகரந்தப்பொடி; ஊத்தை-மாசு,அழுக்கு;  நனி-மிகு; தூவொளி-நிர்மல ஒளி; ஞாலம்-அகிலம், அண்டம்; மன்ற-தெளிவாக; விம்பம்-பிரதிபலிக்கும் உரு;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...