पुरस्तात्कामाक्षि प्रचुररसमाखण्डलपुरी-
पुरन्ध्रीणां लास्यं तव ललितमालोक्य शनकैः ।
नखश्रीभिः स्मेरा बहु वितनुते नूपुररवै-
श्चमत्कृत्या शङ्के चरणयुगली चाटुरचनाः ॥ ५२॥
புரஸ்தாத்
காமாக்ஷி ப்ரசுர ரஸமாக²ண்ட³ல புரீ-
புரந்த்⁴ரீணாம் லாஸ்யம் தவ லலிதமாலோக்ய ஶனகை: ।
நக²ஸ்ரீபி:⁴ ஸ்மேரா
ப³ஹு விதனுதே
நூபுர ரவை-
ஶ்சமத் க்ருʼத்யா ஶங்கே சரணயுக³லீ சாடுரசனா: ॥ 52॥
காமாக்ஷியே! உன்னிரு பாதங்களும், உன்னெதிரில்,
இந்திரபுரியாம் ஆகண்டல நகரத்தின் தேவமங்கையர் மிகவும் அழகாகாகவும், இரசத்துடனும் ஆடுகிற
நடனத்தைக் கண்டு, நகங்களின் ஒளியால் புன்னகைத்துக்கொண்டு, காற்சிலம்புகளின் ஒலியால்
தன்னுடைய பாராட்டும் சொற்களை மிகவும் திறமையுடன் சொல்லிக் கொண்டாடுகின்றன.
இந்திர னூர்பெண்டிர் இன்னெழி லோடும் இரசமாயும்
வந்தாடக் கண்டு, வயக்குகிர் கள்காட்டு மாம்நகையும்
சிந்திகாற் றண்டையால் சேரொலி கள்சொல்லும் சீர்ப்புகழைச்
சிந்திக்கொண் டாடும்நின் சீர்பதங் கள்காமாட் சீசிறந்தே!
வயக்கு-ஒளிர்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam