सरोजं निन्दन्ती नखकिरणकर्पूरशिशिरा
निषिक्ता मारारेर्मुकुटशशिरेखाहिमजलैः ।
स्फुरन्ती कामाक्षि स्फुटरुचिमये पल्लवचये
तवाधत्ते मैत्रीं पथिकसुदृशा पादयुगली ॥ ५३॥
ஸரோஜம்
நிந்த³ந்தீ நக²கிரண கர்பூர ஶிஶிரா
நிஷிக்தா
மாராரேர் முகுட ஶஶிரேகா² ஹிமஜலை:
।
ஸ்பு²ரந்தீ காமாக்ஷி ஸ்பு²ட ருசிமயே
பல்லவசயே
தவாத⁴த்தே மைத்ரீம் பதி²க ஸுத்³ருஶாபாத³யுக³லீ ॥ 53॥
காமாக்ஷி! தாமரையைப் பழிப்பதும், நகவொளியாம் பச்சைக்
கற்பூரத்தால் குளிர்வதும், மன்மதன் எதிரியின் மகுடத்தில் உள்ள சந்திர கலையினின்றும்
பெருகும் பனி நீரால் நனைந்ததும், தூயவொளியென்னும் தளிர்களின் மத்தியில் விளங்குவதுமாம்
உன் பாதங்கள், பிரிவாற்றாமை கொண்ட பெண்ணின் நிலையை ஒத்திடுமன்றோ?
கமலம் பழித்திடும், கால்நகக் கற்பூரக் காந்தியினால்
தமதுடல் தண்ணாகும், தற்பக வைரி தலைநிலவன்
உமிழ்பனி நீரளை, ஒண்தூ தளிர்கள் உறைவதுமாம்
உமதடி, துவ்வினாள் உற்றதை காமாட்சீ! ஒக்குமன்றே
உமதடி, துவ்வினாள் உற்றதை காமாட்சீ! ஒக்குமன்றே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam