நவம்பர் 12, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 54

नतानां सम्पत्तेरनवरतमाकर्षणजपः
प्ररोहत्संसारप्रसरगरिमस्तम्भनजपः
त्वदीयः कामाक्षि स्मरहरमनोमोहनजपः
पटीयान्नः पायात्पदनलिनमञ्जीरनिनदः ५४॥

நதாநாம் ஸம்பத்தே: அனவரதமாகர்ஷண ஜப:
ப்ரரோஹத் ஸம்ஸார ப்ரஸர க³ரிம ஸ்தம்பன ஜப:
த்வதீ³ய: காமாக்ஷி ஸ்மர ஹர மனோ மோஹன ஜப:
படீயான்ன: பாயாத் பத³ நலின மஞ்ஜீர நினத:³ 54

காமாக்ஷியே! துதிப்போர்க்கு செல்வத்தை எப்போதும் ஈர்த்துத்தரும் துதியாயும், மேலும் மேலும் விரிகின்ற இகவாழ்வின் மிகுதலை நிறுத்துகின்ற துதியாயும், மன்மத வைரியின் மனதை மயக்கவல்ல துதியாயும், விளங்கும் திறமை கொண்ட உன் பாதகமலங்களின் சிலம்பொலி எம்மைக் காப்பாற்றட்டும்.

துதிப்போர் தமக்கெப்போ தும்செல்வம் ஈர்க்கும் துதியெனவும்
துதைதலாம் பூவாழ்வின் துன்பம் நிறுத்தும் துதியெனவும்
துதிகாம வைரி துரங்கம்சொக் கச்செய் துதியெனவும்
வதிபாதத் தண்டை வலியால்கா மாட்சீ மறைத்தருளே!


துதி-வணங்குதல்; ஜபம்; துதைதல்-மிகுதல்; துரங்கம்-மனம்; வதி-தங்கும்; வலி-ஒலி; மறைத்தல்-காத்ததல்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...