நவம்பர் 13, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 55

वितन्वीथा नाथे मम शिरसि कामाक्षि कृपया
पदाम्भोजन्यासं पशुपरिबृढप्राणदयिते
पिबन्तो यन्मुद्रां प्रकटमुपकम्पापरिसरं
दृशा नानन्द्यन्ते नलिनभवनारायणमुखाः ५५॥

விதன்வீதா² நாதே² மம ிரஸி காமாக்ஷி க்ருபயா
பதா³ம்போந்யாஸம் பு பரி ப்³ருʼப்ராணத³யிதே
பிப³ந்தோ யன்முத்³ராம் ப்ரகடமுபகம்பா பரிஸரம்
த்³ருʼா நானந்த்³யந்தே நலினபவ நாராயணமுகா:² 55

பசுபதியின் இன்னுயிர் காதலியே! காப்பவளே, காமாக்ஷீ! கம்பை நதிக்கரையில் உன் பாதங்களால் நன்கு பதிந்திருக்கும் தடங்களை தங்கள் கண்களால் அருந்தி பங்கய வாசனும், பார்க்கடலோனும் உள்ளிட்ட அனைவரும் நிலைத்த மகிழ்ச்சியை அடைகிறார்கள்; அப்பாத பங்கயங்களை கருணையோடு எனது சிரசில் வைப்பாயாக!

கம்பைக் கரையினில் காற்றட மாயுன் கழலிணைகள்
தம்மைத்தம் கண்ணுண்டு தாமரை வாசனும் சக்கிரியும்
உம்பரும்  ஓங்கும் உவந்து; சிரமேல் உளங்கனிந்து
அம்மைகா மாட்சீ அவைவை, பசுபதி அன்புயிரே


காற்றடம்-கால் தடம்; தாமரை வாசன் - பிரமன்; சக்கிரி-விஷ்ணு; உம்பர் -தேவர்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...