நவம்பர் 09, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 51

अविश्रान्तं तिष्ठन्नकृतकवचःकन्दरपुटी-
कुटीरान्तः प्रौढं नखरुचिसटालीं प्रकटयन्
प्रचण्डं खण्डत्वं नयतु मम कामाक्षि तरसा
तमोवेतण्डेन्द्रं तव चरणकण्ठीरवपतिः ५१॥

அவி்ராந்தம் திஷ்ட²ன்னக்ருʼதகவச: கந்த³ரபுடீ-
குடீராந்த: ப்ரௌடம் நக²ருசி ஸடாலீம் ப்ரகடயன்
ப்ரசண்ட³ம் க²ண்ட³த்வம் நயது மம காமாக்ஷி தரஸா
தமோ வேதண்டே³ந்த்³ரம் தவ சரண கண்டீ²ரவ பதி: 51

காமாக்ஷியே! யாராலும் செய்யப்படாத வேதவாக்கெனும் குகைக்குள் எப்போதும் ஓயாது நிற்கும் உன்னுடைய பாதமென்னும் சிங்கம், நகவொளியாம் பிடரிமயிர்களை பெருமையுடன் சிலிர்த்துக்கொண்டு, அச்சந்தரும் என்னுடைய அறியாமையென்னும் பெரும் யானையை சீக்கிரமே பிளந்து கொல்லட்டும்!

வேதவாக் கென்னும் வியன்குகை தன்னிலே வீற்றிடுமுன்
பாதமாம் சிம்மம், பகரு கிராமுளை பங்கிதனை
ஓதத்தில் பொங்கி உருக்காட்டும் என்றன் ஒளிமயக்க
போதகம் தன்னை பொளிககா மாட்சீ பொருக்கெனவே!


பகர்-ஒளி; உகிர்-நகம்; பங்கி-ஆண்மயிர்; உளை--பிடரி மயிர்; ஓதம்-பெருமை; பொங்கி-சிலிர்த்து; உருக்காட்டும்-அச்சந்தரும்; ஒளிமயக்கம்-அறிவுமயக்கம், ஞானக்கேடு; போதகம்-யானை; பொளிக- பிளக்க; பொருக்கென-விரைந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...