நவம்பர் 08, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 50

परात्मप्राकाश्यप्रतिफलनचुञ्चुः प्रणमतां
मनोज्ञस्त्वत्पादो मणिमुकुरमुद्रां कलयते
यदीयां कामाक्षि प्रकृतिमसृणाः शोधकदशां
विधातुं चेष्ठन्ते वलरिपुवधूटीकचभराः ५०॥

பராத்ம ப்ராகா்ய ப்ரதிப²லனசுஞ்சு: ப்ரணமதாம்
மனோஜ்ஞஸ் த்வத்பாதோ³ மணிமுகுர முத்³ராம் கலயதே
யதீ³யாம் காமாக்ஷி ப்ரக்ருʼதிமஸ்ருʼணா: ோதகத³ாம்
விதாதும் சேஷ்ட²ந்தே வலரிபுவதூடீகசபரா: 50

காமாக்ஷியே! வலாசுரனின் வைரியாம் வாசவன் மனையாளின் இயல்பாகவே மிருதுவாம், அழகிய கூந்தல், அழகும், வணங்குபவர்களுக்கு பரம்பொருளைக் காட்டி பிரதிபலிக்கும் திறனுள்ள உன் பாதங்களாம் இரத்தினக் கண்ணாடியைத் தூசு துடைக்கும் செயலை செய்ய விரும்புகின்றனவோ எனும்படி அவற்றின்மேல் விழுந்து புரளுகின்றன

வலாசுரன் வைரியாம் வாசவன் இல்லாள்மென் வார்குழல்கள்,
வலமும், பரத்தை வணங்குவோர்க் குக்காட்ட வல்லவுமுன்
மலரடி யீராம் மணியாடி மேலுள்ள மாசுநீக்கும்
நலம்செய, காமாக்ஷீ! நாடி புரளுமேல் ஞான்றுமன்றே!


வைரி-எதிரி; வாசவன்-இந்திரன்; வலம்-அழகு, பரம்-பரம்பொருள்; மணியாடி-இரத்தினக் கண்ணாடி; ஞான்றும்-காலமெல்லாம், நாளும்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...