भवाम्भोधौ नौकां जडिमविपिने पावकशिखा-
ममर्त्येन्द्रादीनामधिमुकुटमुत्तंसकलिकाम् ।
जगत्तापे ज्योत्स्नामकृतकवचःपञ्जरपुटे
शुकस्त्रीं कामाक्ष्या मनसि कलये पादयुगलीम् ॥ ४९॥
ப⁴வாம்போ⁴தௌ⁴ நௌகாம் ஜடி³மவிபினே பாவகஶிகா²-
மமர்த்யேந்த்³ராதீ³நாமதி⁴முகுடமுத்தம்ஸகலிகாம் ।
ஜக³த்தாபே ஜ்யோத்ஸ்நாமக்ருʼதகவச:பஞ்ஜரபுடே
ஶுகஸ்த்ரீம் காமாக்ஷ்யா மனஸி கலயே பாத³யுக³லீம் ॥ 49॥
உலகவாழ்வெனும் கடலில் ஒரு தோணியாகவும், அறியாமைக்
காட்டில் தீச்சுவாலையாகவும், வணங்கிடும் தேவேந்திரன் உள்ளிட்ட அமரர்கள் மணிமுடிகள்
அணிசெய் பூக்களாகவும், உலகங்களின் வெப்பை நீக்கவந்த நிலாவாகவும், எழுதாக்கிளவியாம்
மறையெனும் கூட்டில் பெண்கிளியாகவும் இருக்கும் காமாக்ஷியின் இருபாதங்களையும் என் மனதில்
தியானம் செய்கிறேன்.
பவக்கடல் பாழ்க்குப் படகாகும்; பாலிசப் பாணியில்தீச்
சுவாலை
யவையாம்; துதியிந் திராதியர் சூடிகைப்பூக்
குவையாம்;
நிலவாம் குவலய வெப்புக்கு; கூட்டுறையும்
அவந்தியோத்
தாமுன் அடிகள்கா மாட்சீ! அகத்துறைவே!
பவக்கடல்-சம்சாரக்கடல்; படகு-தோணி; பாலிசம்-அறியாமை; பாணி-காடு; சூடிகை-மணிமுடி;
குவலயம்-உலகம்; வெப்பு-வெப்பத்தின் கொடுமை; அவந்தி-கிளி; ஓத்து-வேதம்; அகத்துறைவு-மனத்தில்
உறைந்தவளே (தியானத்தால்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam