नखाङ्कूरस्मेरद्युतिविमलगङ्गाम्भसि सुखं
कृतस्नानं ज्ञानामृतममलमास्वाद्य नियतम् ।
उदञ्चन्मञ्जीरस्फुरणमणिदीपे मम मनो
मनोज्ञे कामाक्ष्याश्चरणमणिहर्म्ये विहरताम् ॥ ४८॥
நகா²ங்கூர ஸ்மேரத்³யுதி விமல
க³ங்கா³ம்ப⁴ஸி ஸுக²ம்
க்ருʼத ஸ்நானம் ஜ்ஞாநாம்ருʼதமமலமாஸ்வாத்³ய நியதம் ।
உத³ஞ்சன் மஞ்ஜீர ஸ்பு²ரண மணி
தீ³பே மம மனோ
மனோஜ்ஞே
காமாக்ஷ்யாஶ் சரணமணி ஹர்ம்யே விஹரதாம் ॥ 48॥
என் மனம், தேவியின் பாத நகங்களின் வெண்ணொளியாம் கங்கை வெள்ளத்தில் சுகமாக
நீராடிவிட்டு, தூய ஞானவமுதத்தை பருகிவிட்டு, சொலிக்கும் சிலம்புகளாம் இரத்தின விளக்குகளுள்ள,
அழகான காமாக்ஷீயின் பாதங்களெனும் இரத்தின மாளிகையில் எப்போதும் விளையாடட்டும்!
பாத நகங்களின்
பாலொளி யாம்கங்கை பாசனத்தின்
ஓதநீ ராடிதூ
ஓதி அமுதத்தை உண்டுமின்னும்
பாத மணிதீ
பமுள்ளகா மாட்சியின் பாங்குடைய
பாத மணிநகர்
பாவியென் றும்செய்க பாவமதே!
பாலொளி- வெண்மை ஒளி; பாசனம்-வெள்ளம்; ஓதம்- ஈரம்ல; ஓதி-ஞானம்; மணி-இரத்தினம்;
பாங்குடைய-அழகுடைய; நகர்-மாளிகை; பாவி- பரவி; பாவம்-விளையாட்டு;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam