நவம்பர் 05, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 47

किरञ्ज्योत्स्नारीतिं नखमणिरुचा हंसमनसां
वितन्वानः प्रीतिं विकचतरुणाम्भोरुहरुचिः
प्रकाशः श्रीपादस्तव जननि कामाक्षि तनुते
शरत्कालप्रौढिं शशिशकलचूडप्रियतमे ४७॥

கிரஞ்ஜ்யோத்ஸ்னாரீதிம் நக²மணிருசா ஹம்ஸமனஸாம்
விதன்வான: ப்ரீதிம் விகசதருணாம்போருஹருசி:
ப்ரகா: ஸ்ரீபாத³ஸ்தவ ஜனனி காமாக்ஷி தனுதே
ரத்காலப்ரௌடிம் ஶஶிகலசூட³ப்ரியதமே 47

அன்னையே காமாக்ஷீ! பிறைசூடியார்க்கு பிரியமானவளே! நகமணிகளின் காந்தியால் நிலவாக பரவுவதும், ஹம்ஸ யோகியர் மனத்தில் மகிழ்ச்சியை உண்டாக்குவதும், மலர்ந்து செம்மை படர்ந்த கமலப்பூவின் அழகுடையதும், ஒளியுடையதுமாம், உன்றன் திருவடிகள் சரத்கால (கூதிர்காலம்), பெருமையை வெளிப்படுத்துகின்றன.

அன்னைகா மாட்சீ! அரியணிந் தாரன்பே! அஞ்சுகிர்கள்
மின்மணி அல்லோனாய் மேவிடும், ஹம்சர் வியனுளத்தில்
நன்கைத்த ரும்பூத்த நற்செங் கமலத்தின் நவ்வியுமாம்,
உன்னடி கள்கூதிர் ஒண்மை உரைக்கும் ஓளியவையே!


அரி-சந்திரன்; அஞ்சு- ஒளி; உகிர்கள்-நகங்கள்; வியன் - சிறந்த;அல்லோன்-சந்திரன்; நன்கு-மகிழ்ச்சி; ஹம்ஸர்-நால்வகை சந்தியாசிகளுள் ஒருவகை;நவ்வி-அழகு;கூதிர்-சரத்காலம்; ஒண்மை-பெருமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...