प्रवालं सव्रीडं विपिनविवरे वेपयति या
स्फुरल्लीलं बालातपमधिकबालं दधति या ।
रुचिं सान्ध्यां वन्ध्यां विरचयति या वर्धयतु सा
शिवं मे कामाक्ष्याः पदनलिनपाटल्यलहरी ॥ ४६॥
ப்ரவாலம்
ஸவ்ரீடம் விபினவிவரே வேபயதி யா
ஸ்பு²ரல்லீலம் பா³லாதபமதி⁴கபா³லம் த³த4தி யா ।
ருசிம்
ஸாந்த்⁴யாம் வந்த்⁴யாம் விரசயதி யா வர்த⁴யது ஸா
ஶிவம் மே காமாக்ஷ்யா: பத³னலின-பாடல்ய-லஹரீ ॥ 46॥
எதன் சிவப்பு பசுந்துளிர்களை வெட்கி, வனத்திலேயே
நடுங்கி இருக்கச் செய்கிறதோ, மிகுந்த ஒளியுடன் வந்த இளஞ்சூரியனை, ஒரு பச்சைக் குழந்தைபோல,
சக்தியற்றதாய் செய்துவிடுகிறதோ, மாலைநேரத்து செவ்வொளியை பயனற்றதாய் செய்கிறதோ, அத்தகைய
காமாக்ஷியின் தாமரைப்பாதங்களின் செந்நிற அலை போலும் ஒளி, எனக்கு மங்களத்தைப் பெருகச்
செய்யட்டும்.
எதனின் சிவப்பால், இளந்தளிர் நாணுலை ஏற்றுவனம்
வதிய, மிகுயெல் மழமாலி யைச்சேய்போல் மாற்றிடுமோ,
எதால்சந்தி காந்தி இறுமோவக் காமாட்சீ இன்கமல
பதச்செவ் வலைபோல் பகர்,சுப மாயிவண் பாவுகவே!
நாண்-வெட்கம்; உலை-நடுக்கம்; வனம்-காடு, வதிதல்-தங்குதல்;
மிகு+எல்=மிகுந்த ஒளி; மழ மாலி - இளஞ் சூரியன்; சந்தி-மாலை; இறு-பயனிறுதல்; பகர்-ஒளி;
சுபம்-மங்களம்; பாவு-பரவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam