मरालीनां यानाभ्यसनकलनामूलगुरवे
दरिद्राणां त्राणव्यतिकरसुरोद्यानतरवे ।
तमस्काण्डप्रौढिप्रकटनतिरस्कारपटवे
जनोऽयं कामाक्ष्याश्चरणनलिनाय स्पृहयते ॥ ३॥
மராலீநாம் யானாப்⁴யஸன கலநா மூல கு³ரவே
த³ரித்³ராணாம் த்ராண வ்யதிகர
ஸுரோத்³யான தரவே ।
தமஸ் காண்ட³
ப்ரௌடி⁴ ப்ரகடன திரஸ்கார படவே
ஜனோऽயம் காமாக்ஷ்யாஶ்சரண நலினாய ஸ்ப்ருʼஹயதே ॥ 3॥
அன்னப்பறவைகளுக்கு நடை பழக்குவதில்
முதல் ஆசிரியராகவும், ஏழைகளைக் காப்பதில் கற்பகத்தருவாகவும், அறியாமையாம் இருள் குவியலின்
விரிவை போக்குவதாகவும் இருக்கக்கூடிய காமாக்ஷி தேவியின் தாமரை போன்ற இணையடிகளை இவன்
(ஸ்ரீ மூகர்) விரும்புகிறான்.
அன்னப் பறவை
அழகு நடைசெய்ய ஆசிரியள்;
கன்றுயே ழைகட்கு
காக்கும் தருவாய கற்பகமாம்;;
பொன்ற அறியாமை
பூக விரிவினைப் போக்குவதாம்;
ஒன்றவப் பங்கஜ
ஒண்பாதம் காமாட்சீ உன்னுவனே!
பூகம்-இருள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam