செப்டம்பர் 22, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 2

गलग्राही पौरन्दरपुरवनीपल्लवरुचां
धृतपाथम्यानामरुणमहसामादिमगुरुः
समिन्धे बन्धूकस्तबकसहयुध्वा दिशि दिशि
प्रसर्पन्कामाक्ष्याश्चरणकिरणानामरुणिमा २॥

³லக்³ராஹீ பௌரந்த³ர புரவனீ பல்லவ ருசாம்
த்ருʼத பாத²ம்யாநாமருண மஹஸாமாதி³ம கு³ரு:
ஸமிந்தே³ந்தூக ஸ்தப³க ஸஹயுத்வா தி³ஶி தி³ஶி
ப்ரஸர்பந் காமாக்ஷ்யாஶ் சரண கிரணாநாமருணிமா 2


தேவேந்திரன் நகரின் மலர்த் தோட்டங்களின் துளிர்களின் ஒளியோடு கழுத்தைப்பிடி போட்டிப்போட்டும், புதிய ஆதவன் கிரணங்களுக்கும் முதல் ஆசிரியனாகவும், செம்பரத்தைப் பூங்கொத்துடன் சண்டையிடுவதுமான, காமாட்சீ தேவியின் பாதக்கதிர்களின் செந்நிறம் திக்குகள்தோறும் பரவி ஒளிர்கிறது. தேவ தருக்களில் துளிர்க்கும் ஓளியும், அன்னையின் பாதவொளியின் செவ்வொளிக்கு நிகரல்ல;  அருணோதய நேரத்து சூரியனின் இளஞ் சிவப்புக்கும் இதுவே காரணம்; செம்பரத்தையின் அழகும், ஒளியும் இதன்முன் நில்லாது என்று அம்பிகையின் பாத காந்தியை வருணிக்கிறார் மூகர்.

புரந்தரன் தோட்டத்து பூந்தளிர் காந்திக்குப் போட்டியாகும்,
அருணன் புதுக்கதிர்க்(கு) ஆதி குருவாக ஆயசெம்மை
அரத்தைப்பூங் கொத்தை அடிபிடி செய்நின் அடியிணையின்
கிரண்செம்மை திக்கெங்கும் கீற்றாய்கா மாட்சீ கிளர்க்குமன்றே!


கிரண்-கதிர்; கீற்று-கோடுகள்; கிளர்த்தல்-ஓளிர்தல்; அடிபிடி-சண்டை; செம்மை அரத்தை-செம்பரத்தை;


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...