॥ पादारविन्दशतकम् ॥
महिम्नः पन्थानं मदनपरिपन्थिप्रणयिनि
प्रभुर्निर्णेतुं ते भवति यतमानोऽपि कतमः ।
तथापि श्रीकाञ्चीविहृतिरसिके कोऽपि मनसो
विपाकस्त्वत्पादस्तुतिविधिषु जल्पाकयति माम् ॥ १॥
॥ பாதா³ரவிந்த³ஶதகம் ॥
மஹிம்ந: பந்தா²நம் மத³ன பரிபந்தி² ப்ரணயினி
ப்ரபு⁴ர் நிர்ணேதும் தே ப⁴வதி யதமானோऽபி கதம: ।
ததா²பி ஸ்ரீகாஞ்சீ விஹ்ருʼதி ரஸிகே கோऽபி மநஸோ
விபாகஸ் த்வத் பாத³ ஸ்துதி விதி⁴ஷு ஜல்பாகயதி மாம் ॥ 1॥
மன்மத வைரியாம் மகாதேவரிடன் அன்புடைத்த
மாதே மகேசுவரியே! நன்றாக திருகாஞ்சி நகர்தன்னில் விளையாட விருப்புடைத்தவளே! உன் பெருமையின்
போக்கை உரைப்பது திறனுடைத்தவர்க்கும் இயலுமா? ஆயினும் என்னுள்ளத்துள்ள ஏதோவொரு கனிவாயது
உன் திருவடிகளி துதிக்கும் வழிமுறைகளை என்னை பேசவைக்கிறது!
மன்மத வைரி மகாதேவர் மாதே மகேச்வரியே!
நன்றாய்நற் காஞ்சி நகர்விளை யாட நயந்தவளே!
உன்னாற்றல் உள்ளி உரைக்கும் திறனை உடைத்தவர்யார்?
என்றாலும் என்வாய் கனிந்துன்
திருவடி ஏத்திடுதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam