(कामाक्षि मामवतु ते करुणाकटाक्षः)
पातेन लोचनरुचेस्तव कामकोटि
पोतेन पतकपयोधिभयातुराणाम् ।
पूतेन तेन नवकाञ्चनकुण्डलांशु-
वीतेन शीतलय भूधरकन्यके माम् ॥101॥
॥ इति कटाक्षशतकं सम्पूर्णम् ॥
(காமாக்ஷி மாமவது தே கருணாகடாக்ஷ:)
பாதேன லோசனருசேஸ்தவ காமகோடி
போதேன பதகபயோதி பயாதுராணாம் |
பூதேன தேன நவ காஞ்சன குண்டலாம்ஶு-
வீதேன ஶீதலய பூதரகன்யகே மாம் ||101||
|| இதி கடாக்ஷஶதகம் ஸம்பூர்ணம் ||
மலைமகளே! காமகோடி!
தீவினைக் கடலின் அச்சத்தால் துன்புறுபவர்களுக்கு ஓடமானதும், தூயதும், புது பொற்குண்டல
ஒளி பரவியதுமாம் உன் கடைக்கண் வீச்சால் என்னை குளிர்விப்பாய்!
காமாக்ஷீ எனக்குன் கருணைக் கடைக்கண்ணைத் தருவாயாக!
மலைமக ளேகா
மகோடீ! கருவினை மாகடலின்
அலையில் உழலுமோர்
அச்சத்தால் துன்பம் அடைந்தவர்தம்
உலைவகற் றோடமே!
ஒண்பொற் புதுக்குழை ஓங்குமொளி
நிலைத்த கடைக்கண்ணால்
நீயென்னை தண்செய்க நித்தியமே!
|| இத்துடன் கடைக்கண்
நூறும் நிறைந்தது ||
கருவினை-தீவினை; உலைவு-வருத்தம்; கெடுதல்; குழை-குண்டலம்; தண்-குளிர்வு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam