वहन्ती सैन्दूरीं सरणिमवनम्रामरपुऱी-
पुरन्ध्रीसीमन्ते कविकमलबालार्कसुषमा ।
त्रयीसीमन्तिन्याः स्तनतटनिचोलारुणपटी
विभान्ती कामाक्ष्याः पदनलिनकान्तिर्विजयते ॥ ४॥
வஹந்தீ ஸைந்தூ³ரீம் ஸரணிமவனம்ராமரபுரீ-
புரந்த்⁴ரீ ஸீமந்தே கவி கமல
பா³லார்க ஸுஷமா ।
த்ரயீ ஸீமந்தின்யா: ஸ்தன தட
நிசோலாருண படீ
விபா⁴ந்தீ காமாக்ஷ்யா: பத³ நலின காந்திர் விஜயதே ॥ 4॥
தன்னை வணங்கும் தேவருலகப் பெண்டிரின்
நெற்றி வகிட்டில் சிந்தூரப் பொட்டாக நிலைபெற்று, கவிகளாகிய கமலங்களை மலரச் செய்யும்
இளஞ் சூரியன் ஒளியாக, வேதங்களாகிய பெண்களின் தனங்களை மறைக்கும் செவ்வாடையாய், ஒளிரும்
காமாக்ஷீ தேவியின் தாமரை போன்ற பாதங்கள், அழகும், வெற்றியுமாய் விளங்குகிறது. தேவருலகப்
பெண்டிர் சௌமங்கல்யத்திற்கு காமாக்ஷியின் பாத அழகை அவர்கள் அண்டுவதே காரணம் என்று ஸ்ரீமூகர்
உணர்த்துகிறார்! கத்ய, பத்ய, கீதி உருவாக உள்ள மூன்று வேதங்களுமே இங்கு த்ரயீ என்ற
பதத்தால் குறிக்கப்படுகிறது.
வணங்கிடும் தேவ மகளிர்க்குப் பொட்டாய் வகிடுறைந்து
மணக்கும் கவிஞர் மலர்க்கம லங்கள் மலர்த்திடுவிண்
மணியிளங் கீற்றாய் மறைம களிர்மார் மறைசிவந்த
அணிதாம ரையிணை அந்தமாய் காமாட்சீ ஆடுறுதே!
விண்மணி-சூரியன்; அணி-ஆடை; இணை-பாதம்;
அந்தம்-அழகாய்; ஆடு-வெற்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam