प्रणम्रीभूतस्य प्रणयकलहत्रस्तमनसः
स्मरारातेश्चूडावियति गृहमेधी हिमकरः ।
ययोः सान्ध्यां कान्तिं वहति सुषमाभिश्चरणयोः
तयोर्मे कामाक्ष्या हृदयमपतन्द्रं विहरताम् ॥ ५॥
ப்ரணம்ரீபூ⁴தஸ்ய ப்ரணயகலஹ
த்ரஸ்த மனஸ:
ஸ்மராராதேஶ் சூடா³வியதி க்³ருʼஹமேதீ⁴ ஹிமகர: ।
யயோ: ஸாந்த்⁴யாம் காந்திம் வஹதி ஸுஷமாபி⁴ஶ் சரணயோ:
தயோர் மே காமாக்ஷ்யா ஹ்ருʼத³யம பதந்த்³ரம் விஹரதாம் ॥ 5॥
ஊடலால் அஞ்சிய மனத்துடன் வணங்கி
நிற்கும் பரமசிவனின் திருமுடியில் குடியிருக்கும் சந்திரன், எவைகளின் ஒளியால் தன்னுடைய
மாலை நேரத்து செவ்வொளியை உறுகிறானோ, அத்தகைய காமாக்ஷியின் திருவடிகளின் என்மனம் சோர்வின்றி
விளையாடட்டும். ப்ரணயகலஹம் என்பது நாயகன்பால் நாயகி கொள்ளும் ஊடல் பாவம்; எங்கே காமாட்சீ
தேவி தன்மீது ஊடல் கொண்டுவிடுவாளோ என்று அஞ்சும் சிவன், அவளை உள்ளத்தால் வணங்குகிறாராம்!
ஊடலால் அஞ்சும் உளத்தால் வணங்கும் உமேசனவர்
சூடி சிரத்தணி சோமனெப் பாதச் சுடரினால்தாம்
ஈடில்மா லைநேர இன்செவ் வொளியாய் இலங்குவானோ
ஆடட்டு மென்னகம் அஃதிலே காமாட்சீ அற்றமற்றே!
சோமன்-சந்திரன்; இலங்குதல்-ஒளிருதல்;
ஆடுதல்-விளையாடுதல்; அற்றம்-சோர்வு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam