ஆகஸ்ட் 21, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 72

कामाक्षि मन्मथरिपुं प्रति मारताप-
मोहान्धकारजलदागमनेन नृत्यन्
दुष्कर्मकञ्चुकिकुलं कबलीकरोतु
व्यामिश्रमेचकरुचिस्त्वदपाङ्गकेकी 72
காமாக்ஷி மன்மத ரிபும் ப்ரதி மாரதாப-
மோஹாந்தகார ஜலதாகமனேன ந்ருத்யன் |
துஷ்கர்ம கஞ்சுகிகுலம் கபலீகரோது
வ்யாமிஶ்ர மேசக ருசிஸ்த்வதபாங்ககேகீ ||72||

காமாக்ஷீ! பல நிறங்களின் சேர்க்கையோடு கருநீலமுள்ளதாம் உனது கடைக்கண்ணாம் மயில், மன்மத தாபத்தால் தூண்டப்பட்ட மோகமாம் மேகத்தின் வருகையினால் மகிழ்ந்து, மன்மதனின் எதிரியாம் சிவனெதிரில் நடனமாடுகிறது! அது என்னுடைய தீவினைகளாம் பாம்புகளின் கூட்டத்தை விழுங்கட்டுமே!

நிறங்கள் கலந்தகார் நீல மயிலன்ன நின்கடைக்கண்
சிறந்தே மதன்தாபம் சேரவும் மோகமாம் சீதமதன்
இறுத்தரல் இன்பத்தால் ஈசன் எதிரினில் என்றுமாடும்!
இறலது செய்யட்டும் என்தீயூழ் பாம்பு இனமதையே!


கார் - கருமை; சீதம் - மேகம்; இறுத்தரல் - வருகை;  இறல் - அழிக்கட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...