ஆகஸ்ட் 20, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 71

कालाम्बुवाहनिवहैः कलहायते ते
कामाक्षि कालिममदेन सदा कटाक्षः
चित्रं तथापि नितराममुमेव दृष्ट्वा
सोत्कण्ठ एव रमते किल नीलकण्ठः 71

காலாம்புவாஹ நிவஹை: கலஹாயதே தே
காமாக்ஷி காலிம மதேன ஸதா கடாக்ஷ: |
சித்ரம் ததாபி நிதராமமுமேவ த்ருஷ்ட்வா
ஸோத்கண்ட ஏவ ரமதே கில நீலகண்ட: ||71||

காமாக்ஷீ! உனது கடைக்கண் பார்வையானது மிகவும் கருமையாக இருக்கும் மதர்ப்பால் நீருண்ட மேகங்களோடு எப்போதும் சண்டையிடுகிறது. ஆயினும் அப்பார்வையையே, மிகவும் பார்த்து, நீலகண்டனார் மட்டும், நீலகண்ட மயில்கள்போல், எப்போதும் மகிழ்ந்து ஆடுகிறாரே, வியப்பல்லவா?  

கருமை மதர்ப்பாலே, காமாட்சீ உன்கடைக் கண்விழிகள்
கருமேகத் தோடே கடுஞ்சண்டை செய்யுமே! கண்டுவந்து
கருநீல கண்டருன் கண்ணிலே தோய்ந்து களித்துளத்தில்
கருதிடும் கூத்தே கணமும்! வியப்பன்றோ, காண்பதற்கே!

மதர்ப்பு - பெருமிதம்; கண்டுவந்து - கண்டு மகிழ்ந்து; 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...