कामाङ्कुरैकनिलयस्तव दृष्टिपातः
कामाक्षि भक्तमनसां प्रददाति कामान् ।
रागान्वितः स्वयमपि प्रकटीकरोति
वैराग्यमेव कथमेष महामुनीनाम् ॥70॥
காமாம்குரைக நிலயஸ்தவ த்ருஷ்டிபாத:
காமாக்ஷி பக்தமனஸாம் ப்ரததாதி காமான் |
ராகான்வித: ஸ்வயமபி ப்ரகடீகரோதி
வைராக்யமேவ கதமேஷ மஹாமுனீனாம் ||70||
காமாக்ஷீ! உன் பார்வை
ஆசை விளையுமிடம்; உன் பக்தர்களின் மனங்கள் நாடி விழைவதனைத்தும் தருவதோடு, தானுமே ஆசையினை
கூடியதாக இருப்பினும், பெரிய முனிவர்களுக்கெல்லாம் பற்றற்ற நிலையை எப்படித் தருகிறது?
ஆசைவி ளைந்திடும் அங்கணுன் பார்வையாம்;
அன்பரவர்
ஆசையாய் நாடும் அனைத்தும் அளித்துடன்
ஆதரித்து
ஆசையைத் தானும் அகத்துடைத் தும்பெரும்
ஆரிடர்க்கு
ஆசை யகற்றி அருள்வதென், காமாட்சீ! ஆற்றுவதே?
ஆரிடர் - முனிவர்கள்;
அங்கண்- அழகிய இடம்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam