ஆகஸ்ட் 18, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 69

कामाक्षि विभ्रमबलैकनिधिर्विधाय
भ्रूवल्लिचापकुटिलीकृतिमेव चित्रम्
स्वाधीनतां तव निनाय शशाङ्कमौले:
अङ्गार्ध राज्य सुखलाभमपाङ्गवीरः 69

காமாக்ஷி விப்ரம பலைக நிதிர் விதாய
ப்ரூவல்லி சாப குடிலீக்ருதிமேவ சித்ரம் |
ஸ்வாதீனதாம் தவ நினாய ஶஶாங்கமௌலே:
ங்கார்த ராஜ்ய ஸுகலாபமபாங்கவீர: ||69||

காமாக்ஷீ உன் கடைக்கண் பார்வையாம் வீரன் உன்னுடைய அழகையே தன்னுடைய வலிமையாகக் கொண்டு, கொடிபோன்ற புருவமாகிய வில்லை வளைப்பதைமட்டும் செய்து, சந்திரசேகரரின் பாதியுடலாம் அரச சுகம் என்னும் பயனை உன்வயம் உரிமை செய்தான்! இது விந்தையே!

உன்கடைக் கண்ணாம் உயுத்தம் புரிவீரன் உன்னழகை
தன்வலி யாக்கித் தடக்கொடி போலாம்நு தல்தனுசை
நன்குவ ளைத்துமே நாணேற்றி ஈசனார் நங்கையுனை
தன்பங்காய் கொள்ளச்செய் தானே!கா மாட்சிவிந் தையதன்றே!


உயுத்தம் - போர்; தடக்கொடி-வளைந்த கொடி; நுதல்-புருவம்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...