மே 07, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 67

अधिकाञ्चि वर्धमानामतुलां करवाणि पारणामक्ष्णोः
आनन्दपाकभेदामरुणिमपरिणामगर्वपल्लविताम् 67

அதிகாஞ்சி வர்தமானாம் அதுலாம் கரவாணி பாரணாம் அக்ஷ்ணோ: |
ஆனந்த பாக பேதாம் அருணிம பரிணாம கர்வபல்லவிதாம் ||67||

காஞ்சீபுரியில் வளர்ந்தோங்குவதும், தன்நிகரில்லாததும், மகிழ்வின் பல்வேறு நிலைகளால் நிறைந்த உருவமுடையதும், கூடிய செஞ்சிவப்பின் செருக்கில் வளர்ந்தோங்கிய துளிர் போலிருப்பதுமாக உள்ள ஒன்றை என் கண்களாப் பார்க்கிறேன்.

கஞ்சியில் ஓங்கி களையேறு மொன்றை கதழ்விலியை
விஞ்சும் மகிழ்வதன் வேறாம் நிலைகளாய் வீங்குவதை
செஞ்சிவப் பின்தற் செருக்கில் வளர்ந்த சிறுதளிராம்
கஞ்சத்தை என்னிரு கண்கள் விருந்தாகக் கண்டனவே

களையேறுதைல் - ஒளிமிகுதல், வளருதல்; கதழ்வு - ஒப்பு, நிகர்; கஞ்சம் - தாமரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...