शर्वादिपरमसाधकगुर्वानीताय कामपीठजुषे ।
सर्वाकृतये शोणिमगर्वायास्मै समर्प्यते हृदयम् ॥43॥
ஶர்வாதி பரம ஸாதக குர்வாநீதாய காமபீடஜுஷே |
ஸர்வாக்ருதயே சோணிம கர்வாய ஸமர்ப்யதே ஹ்ருதயம் ||43||
பரமசிவன் முதலான (ஆதிகுரு) சிறந்த பயிற்சியுள்ள ஆசிரியர்களால், அழைத்துவரப்பட்டு வழிபடப்படுவதும், காமபீடத்தில் விளங்குவதும், அனைத்துலகின் வடிவமானதும், உயர்ந்த செம்மை நிறத்ததுமாகிய மூர்த்தியொன்றிட என் உள்ளமானது, ஒப்பு கொடுக்கப்பட்டது. (குரு பரம்பரையைப் பற்றிச் சொல்லும்போது, ஸதாசிவஸமாரம்பாம் என்றே பொதுவாகச் சொல்லப்படுகிறது)
சிவனார் முதலாய் சிறந்து
பயின்றவர்கள் சேவிக்க
தவகாம பீடத் தமர்ந்து
விளங்குமாம்; தாமனைத்துக்
குவலயத் தின்வடிவும் கொண்டதாம்;
செம்மை குடிகொண்டு
உவந்த உயர்விலென் உள்ளம்
ஒடுங்குமே ஒப்பெனவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam