ஏப்ரல் 14, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 44

समया सान्ध्यमयूखैः समया बुद्धया सदैव शीलितया
उमया काञ्चीरतया मया लभ्यते किं नु तादात्म्यम्  44

ஸமயா ஸாந்த்ய மயூகை: ஸமயா புத்யா ஸதைவ சிலிதயா |
உமயா காஞ்சீரதயா மயா லப்யதே கிம் நு தாதாத்ம்யம் ||44||


உதய பாநுவின் கிரணங்களுக்குச் சமமான ஒளிமிக்கவளும்வேறுபடாதநடுவு நிலையுடைய அறிவுள்ளவர்களால் எப்போதும் வழிபடப்படுபவளும்காஞ்சீபுரத்தில் எப்போது விழைவு உள்ளவளுமாக இருக்கிற உமையன்னையோடு ஒன்றுவது எனக்கு இயலுமா?

உதிக்கின்ற பாநுவின் ஒண்கதிர்க் கொப்பாய் ஒளியுடனும்
மதிக்கும் அறிவும் மயங்கா நிலைப்பாட்டு மாதவத்தோர்
துதியுட னும்காஞ்சீ தொன்னூர் விழைந்து துலங்கிடுமெம்
கதியுமைத் தாயில் கலப்பதெவ் வாரென்று கண்டிலேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...