ஏப்ரல் 15, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 45

जन्तोस्तव पदपूजनसन्तोषतरङ्गितस्य कामाक्षि
वन्धो यदि भवति पुनः सिन्धोरम्भस्सु बम्भ्रमीति शिला 45

ஜந்தோஸ்தவ பதபூஜன-ஸந்தோஷ தரங்கிதஸ்ய காமாக்ஷி |
பந்தோ யதி பவதி புந: ஸின்தோரம்பஸ்ஸு பம்ப்ரமீதி சிலா ||45||


ஹே காமாக்ஷி தாயேஉன் பாதங்களைப் பூஜிப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி அலைகள் நிறைந்த மானுடர்க்கும்இந்த உலகின் பிறந்திறக்கும் தொடர்பானது உண்டென்றால்நதி நீரினில் கற்பாறையானது மிதந்து சுற்றுகிறது என்பது போலாகும்!

அம்மையே காமாட்சி அன்றாடம் உந்தன் அடியிணையைக்
கும்பிட்டு பூசித்து குன்றா மகிழ்வலைகள் கொள்வார்க்கும்
இம்மா நிலத்தில் இழிவாய் பிறப்பிறப்பு என்றாலே
அம்மாவோ! கற்பாறை ஆழ்நதி மேலாம் அதிசயமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...