वदनारविन्दवक्षोवामाङ्कतटीवशंवदीभूता ।
पूरुषत्रितये त्रेधा पुरन्ध्रिरूपा त्वमेव कामाक्षि ॥40॥
வதநாரவிந்த வக்ஷோவாமாங்க தடீ வஶம்வதீ பூதா |
புருஷ த்ரிதயே த்ரேதா புரந்த்ரீ ரூபா த்வமேவ காமாக்ஷி
|| (40)
காமாக்ஷி தேவியே! மும்மூர்த்திகளான ப்ரம்ஹா, விஷ்ணு, சிவன் ஆகியவர்களின் முக கமலத்திலும், மார்பிலும், இடது மடியிலுமாக, மூன்று உருவங்களிலும், பத்தினியாக நீயே உள்ளாய். அதாவது ஸரஸ்வதி, லக்ஷ்மீ, பார்வதி என்ற மூன்று தோற்றங்களிலும் இருப்பவள் காமாக்ஷியே என்கிறார் மூககவி.
அன்னையே காமாட்சி அண்டமுதல் மூவராய் ஆனாராம்,
பன்மன் முகத்தில், பரந்தாமன் நெஞ்சினில், பார்வதீசன்
தன்மடி மீதினில், தாரமாய் வீற்றிடும் தாயவளே
உன்னுவ தெல்லாம் உனதருள் தோற்றமாம் உண்மையதே
பன்மன் - தாமரையமர்ந்தான், பிரமன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam