मधुकरसहचरचिकुरैर्मदनागमसमयदीक्षितकटाक्षैः ।
मण्डितकम्पातीरैर्मङ्गलकन्दैर्ममास्तु सारूप्यम् ॥39॥
மதுகர ஸஹசர சிகுரை: மதநாகம ஸமயதீக்ஷித கடாக்ஷை: |
மண்டித கம்பா தீரைர் மங்கள கந்தைர் மமாஸ்து ஸாரூப்யம்
|| (39)
தேனைத்தரும் வண்டுகளைப்போல் கரிய நிறத்து கூந்தலுடையதும், காம சாத்திரத்தைக் கருதும் கடைக்கண் பார்வை கொண்டதும், கம்பாநதிக் கரையை அழகுசெய்வதும், மங்களத்தின் கிழங்குமாய் (கிழங்குவொன்றே விதையாகவும் விதைப் பயனாகவும் இருப்பது) இருப்பதுமான ஒன்றோடு ஒன்றிய உருவம் எனக்கு உண்டாகட்டும்.
வண்டின வண்ணம் வளர்ந்த அளகத்தை வைத்ததுவாம்
கண்ணின் கடையிலே காமத்து வேதம் கருதுவதாம்
புண்ணியக் கம்பையைப் போற்றும் கரையைப் புனைவதுவாம்
ஒண்பொருள் மங்கலம் ஒன்றொடு என்னுரு ஒன்றுகவே
புனைவது - அழகு செய்வது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam